Friday, 15 September 2017

Monday, 11 September 2017

Sunday, 3 September 2017

All Over INDIA - 800 ENGINEERING COLLEGES CLOSED

800 பொறியியல் கல்லூரிகள் மூடல்!!

               தொடர்ந்து மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், நாடு முழுதும் 800  பொறியியல் கல்லூரிகள் மூடப்பட வேண்டும் என ஏஐசிடிஇ தலைவர் அனில் தத்தாத்ரேயா கூறியுள்ளார். விதிமுறை: பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது: ஏஐசிடிஇயின் கடுமையான விதி காரணமாக வருடந்தோறும் 150 கல்லூரிகள் மூடப்படுகின்றன. போதிய உட்கட்டமைப்பு, தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் மாணவர் சேர்க்கை 30 சதவீதத்திற்கு கீழ் இருந்தால் கல்லூரிகள் மூடப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும்.

நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எம்டெக் அல்லது பிஎச்டி முடித்தவர்களாக இருக்கின்றனர்.

இவர்களுக்கு போதிய பயிற்சி இல்லாதவர்களாக உள்ளனர். இனி வரும் காலங்களில் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியராக பணிபுரிய, 6 மாத கட்டாய பயிற்சியில் சேர வேண்டும். தற்போது பணிபுரிபவர்கள் இந்த பயிற்சியில் சேர 3 வருட அவகாசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகா அதிகம்:
              ஏஐசிடிஇ., இணையத்தில் உள்ள புள்ளிவிவரப்படி, கடந்த 2014 - 15 முதல் 2017 - 18 கல்வியாண்டு வரை 410 பொறியியல் கல்லூரிகள் மூட அனுமதி கிடைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக கடந்த 2016- 17 கல்வியாண்டில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 20 கல்லூரிகள் மூட அனுமதி கிடைத்துள்ளது. தெலுங்கானா, உ.பி., மஹாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், தமிழகம், அரியானா, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகளவில் கல்லூரிகளை மூட அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.

கடந்த 2014- 18 காலகட்டத்தில் மூடப்பட்ட கல்லூரிகளின் விவரம்:

தெலுங்கானா-64
மஹாராஷ்டிரா-59
உ.பி.,-47
தமிழகம்,அரியானா-31
ராஜஸ்தான்-30
ஆந்திரா-29
குஜராத்-29
கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம-21
பஞ்சாப்-19

வருடம்: மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள்

2014-2015: 77

2015-2016: 125

2016-2017: 149

2017-2018: 65

Saturday, 2 September 2017

Friday, 1 September 2017

ANNA UNIVERSITY Revaluation Remaining RESULTS - DIRECT SERVER

Anna University April/May 2017 Revaluation Remaining Results

Anna University Results High-Speed Server Links :-

Anna University Results(Chennai & Madurai) 
Anna University Results(Coimbatore)                      
Anna University Results(Tirunelveli)                        

 >>>> DIRECT LINK<<<<

>>>> DIRECT LINK<<<<



Thursday, 31 August 2017

Wednesday, 30 August 2017

Tuesday, 29 August 2017

Anna University Revaluation Result UG (Batches 2014,2015,2016) of April/May 2017 is Published.

Anna University All Semester April/May 2017 Revaluation Results

Anna University Results High-Speed Server Links :-

Anna University Results(Chennai & Madurai) 
Anna University Results(Coimbatore)                      
Anna University Results(Tirunelveli)                        

 >>>> DIRECT LINK - 1 <<<<

 >>>> DIRECT LINK - 2  <<<<


>>>> DIRECT LINK - 4 <<<<


Sunday, 27 August 2017

Anna University - Strict Rules for Using Mobile Phones

மொபைல்போன் பயன்படுத்த தடை அண்ணா பல்கலை கட்டுப்பாடு:

அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரி களின் வகுப்பறையில் மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும் மாணவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, ஒரு வாரத்திற்கு முன், அரசின் கவுன்சிலிங் வழியே, மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது.தற்போது நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பிக் கொள்ள, தனியார் கல்லுாரிகளுக்கு, வரும், 31ம் தேதி வரை அண்ணா பல்கலை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகளில், முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் துவங்கி உள்ளன. இதில், மாணவர்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பள்ளி படிப்பை முடித்து விட்டு வரும் மாணவர்கள், கல்லுாரி என்பதால், ஜாலியாக வகுப்பை, 'கட்' அடித்து, ஊர் சுற்றக்கூடாது என்றும், கல்லுாரிக்கு வராவிட்டால், பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும், அண்ணா பல்கலை கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்ணா பல்கலையின், 17 உறுப்பு கல்லுாரிகளிலும், சென்னை அண்ணா பல்கலை வளாக கல்லுாரி களிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.இதன்படி, மாணவர்கள் வகுப்பு நேரத்தில், மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

வகுப்பிற்குள் மாணவர்கள் நுழையும் போது, மொபைல் போனை அணைத்து வைக்க வேண்டும். வகுப்பில் அமர்ந்து, 'பேஸ்புக், வாட்ஸ் ஆப், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில், நேரத்தை வீணாக்க கூடாது.

வகுப்பில், மொபைல்போன் பயன்படுத்தப்படுகிறதா என்பதை, ஆசிரியர்கள் குழு ஆய்வு நடத்தும். இதில், மாணவர்களின் மொபைல்போன் கண்டுபிடிக்கப்பட்டால், போன் பறிமுதல் செய்யப்படும்.பின், பெற்றோரை அழைத்து வந்து கடிதம் கொடுத்த பிறகே, மீண்டும் வழங்கப்படும் என, 'கிடுக்கிப்பிடி' போடப்பட்டுள்ளது.

Saturday, 26 August 2017

Anna University - Entrance System for Engineering

பொறியியல் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு?

​​​>>மருத்துவப் படிப்புக்கு நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்துவதைப் போலவே பொறியியல் படிப்புக்கும் அத்தகைய ஒரு தேர்வு அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

>>நாடு முழுவதிலுமுள்ள தொழில்நுட்பப் படிப்புகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அமைப்பு கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதிலுமுள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு 2018-ல் இருந்து தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.

>>தற்போது நாடு முழுவதிலும் 3,300 அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருப்பதாகவும் ஆண்டொன்றிற்கு இந்தக் கல்லூரிகளில் 16 லட்சம் மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர் எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

>>இந்தக் கல்லூரிகளில் மாநிலத்திற்கு ஒரு விதமாக சேர்க்கை நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.தமிழகத்தில் பிளஸ் டூ மார்க் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.மருத்துவக் கல்லூரிகளிலும் அப்படித்தான் சேர்க்கப்பட்டு வந்தது. தற்போது அந்த முறை நீட் தேர்வால் மாற்றப்பட்டுள்ளது.அடுத்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு நாடு முழுவதற்கும் சேர்த்து ஒரே மாதிரியான தேர்வு ஒன்றை நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் முடிவு செய்து,வருகின்ற கல்வி ஆண்டில் இருந்தே அது நடைமுறைக்கு வரும் என அறிவித்தது.

>>இந்த நிலையில் அடுத்த ஆண்டே அதை அமல்படுத்தலாமா வேண்டாமா என மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் இன்னும் முடிவெடுக்கவில்லை.நீட் தேர்வின் விளைவு எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்துவது பற்றிப் பரிசீலிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

>>எனவே அடுத்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு நடக்காது என்றாலும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு முழுமையாகக் கைவிடவில்லை எனவும் மனிதவள மேம்பாட்டுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Thursday, 24 August 2017

Anna University - Engineering Course - TAMIL MEDIUM

தமிழ் மொழியில் பொறியியல் பயில்வது நல்லதா? இதோ பதில்

>>அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழ் வழியில், 64 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.

>>அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 518 இன்ஜி., கல்லுாரிகளில், 1.75 லட்சம் இடங்களுக்கு, ஜூலை, 23முதல், ஆகஸ்ட், 11 வரை, கவுன்சிலிங் நடந்தது. ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 352 மாணவர்கள் அழைக்கப்பட்டனர்; 48 ஆயிரத்து, 583 பேர் பங்கேற்கவில்லை; 86 ஆயிரத்து, 355 மாணவர்கள், பல பாடப்பிரிவுகளில் ஒதுக்கீடு பெற்றனர்.மீதமுள்ள, 89 ஆயிரத்து, 101 இடங்கள், மாணவர்கள் இன்றி காலியாக உள்ளன.

>>இதில், தனியார் கல்லுாரிகளில், 88 ஆயிரத்து, 161; அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லுாரிகளில், மூன்று; அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், 937 இடங்கள் காலியாக உள்ளன. 

>>அண்ணா பல்கலையின், 12 உறுப்பு கல்லுாரி களில், தமிழ் வழியில், மெக்கானிக்கல், 718; சிவில் பிரிவில்,660 இடங்கள் கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்பட்டன.அவற்றில், 36 சதவீதமான, 493 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; மீதம், 64 சதவீதமான, 885 இடங்கள் காலியாக உள்ளன. 

>>குறைந்த கல்வி கட்டணம், இலவச விடுதி வசதி, வேலைவாய்ப்பு வளாக நேர்காணல் போன்ற சலுகைகள் இருந்தும், ஆங்கில வழி பாடம் இல்லை என்பதால், தமிழ் வழி இடங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் சேரவில்லை.அதே நேரத்தில், ஆங்கில வழியில் தனியார் கல்லுாரிகளில் அதிக கட்டணம் செலுத்தி, பல மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து இது அண்ணா பல்கலை இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது : 

>>இன்ஜி., படிப்பில், ஆங்கில வழியில் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்ற தவறான எண்ணம், மாணவர்களிடம் உள்ளது. தமிழ் வழியில் படித்தாலும், அதே வேலைவாய்ப்பு கிடைக்கும். 

>>தமிழ் வழி மாணவர்கள், ஆங்கிலத்திலும் தேர்வு எழுதலாம். அவர்களின் சான்றிதழில், தமிழ் வழி என, குறிப்பிடப்படுவதும் இல்லை. அதனால், ஆங்கில வழியில் அரசு கல்லுாரிகளில் இடம் கிடைக்காவிட்டால், தமிழ் வழியில் சேரலாம். அது போல, தமிழ் வழியில் படித்தால், தமிழக அரசுத் துறை பணிகளிலும்முன்னுரிமை கிடைக்கும். இவ்வாறு அவர்கள்கூ றினர்.