தமிழ் மொழியில் பொறியியல் பயில்வது நல்லதா? இதோ பதில்
>>அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழ் வழியில், 64 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.
>>அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 518 இன்ஜி., கல்லுாரிகளில், 1.75 லட்சம் இடங்களுக்கு, ஜூலை, 23முதல், ஆகஸ்ட், 11 வரை, கவுன்சிலிங் நடந்தது. ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 352 மாணவர்கள் அழைக்கப்பட்டனர்; 48 ஆயிரத்து, 583 பேர் பங்கேற்கவில்லை; 86 ஆயிரத்து, 355 மாணவர்கள், பல பாடப்பிரிவுகளில் ஒதுக்கீடு பெற்றனர்.மீதமுள்ள, 89 ஆயிரத்து, 101 இடங்கள், மாணவர்கள் இன்றி காலியாக உள்ளன.
>>இதில், தனியார் கல்லுாரிகளில், 88 ஆயிரத்து, 161; அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லுாரிகளில், மூன்று; அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், 937 இடங்கள் காலியாக உள்ளன.
>>அண்ணா பல்கலையின், 12 உறுப்பு கல்லுாரி களில், தமிழ் வழியில், மெக்கானிக்கல், 718; சிவில் பிரிவில்,660 இடங்கள் கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்பட்டன.அவற்றில், 36 சதவீதமான, 493 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; மீதம், 64 சதவீதமான, 885 இடங்கள் காலியாக உள்ளன.
>>குறைந்த கல்வி கட்டணம், இலவச விடுதி வசதி, வேலைவாய்ப்பு வளாக நேர்காணல் போன்ற சலுகைகள் இருந்தும், ஆங்கில வழி பாடம் இல்லை என்பதால், தமிழ் வழி இடங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் சேரவில்லை.அதே நேரத்தில், ஆங்கில வழியில் தனியார் கல்லுாரிகளில் அதிக கட்டணம் செலுத்தி, பல மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து இது அண்ணா பல்கலை இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது :
>>இன்ஜி., படிப்பில், ஆங்கில வழியில் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்ற தவறான எண்ணம், மாணவர்களிடம் உள்ளது. தமிழ் வழியில் படித்தாலும், அதே வேலைவாய்ப்பு கிடைக்கும்.
>>தமிழ் வழி மாணவர்கள், ஆங்கிலத்திலும் தேர்வு எழுதலாம். அவர்களின் சான்றிதழில், தமிழ் வழி என, குறிப்பிடப்படுவதும் இல்லை. அதனால், ஆங்கில வழியில் அரசு கல்லுாரிகளில் இடம் கிடைக்காவிட்டால், தமிழ் வழியில் சேரலாம். அது போல, தமிழ் வழியில் படித்தால், தமிழக அரசுத் துறை பணிகளிலும்முன்னுரிமை கிடைக்கும். இவ்வாறு அவர்கள்கூ றினர்.
It is a very informative and useful post thanks it is good material to read this post increases my knowledge. Anna university engineering courses
ReplyDelete