800 பொறியியல் கல்லூரிகள் மூடல்!!
தொடர்ந்து மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், நாடு முழுதும் 800 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட வேண்டும் என ஏஐசிடிஇ தலைவர் அனில் தத்தாத்ரேயா கூறியுள்ளார். விதிமுறை: பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது: ஏஐசிடிஇயின் கடுமையான விதி காரணமாக வருடந்தோறும் 150 கல்லூரிகள் மூடப்படுகின்றன. போதிய உட்கட்டமைப்பு, தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் மாணவர் சேர்க்கை 30 சதவீதத்திற்கு கீழ் இருந்தால் கல்லூரிகள் மூடப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும்.
நாட்டில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எம்டெக் அல்லது பிஎச்டி முடித்தவர்களாக இருக்கின்றனர்.
இவர்களுக்கு போதிய பயிற்சி இல்லாதவர்களாக உள்ளனர். இனி வரும் காலங்களில் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியராக பணிபுரிய, 6 மாத கட்டாய பயிற்சியில் சேர வேண்டும். தற்போது பணிபுரிபவர்கள் இந்த பயிற்சியில் சேர 3 வருட அவகாசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகா அதிகம்:
ஏஐசிடிஇ., இணையத்தில் உள்ள புள்ளிவிவரப்படி, கடந்த 2014 - 15 முதல் 2017 - 18 கல்வியாண்டு வரை 410 பொறியியல் கல்லூரிகள் மூட அனுமதி கிடைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக கடந்த 2016- 17 கல்வியாண்டில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 20 கல்லூரிகள் மூட அனுமதி கிடைத்துள்ளது. தெலுங்கானா, உ.பி., மஹாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், தமிழகம், அரியானா, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகளவில் கல்லூரிகளை மூட அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன.
கடந்த 2014- 18 காலகட்டத்தில் மூடப்பட்ட கல்லூரிகளின் விவரம்:
தெலுங்கானா-64
மஹாராஷ்டிரா-59
உ.பி.,-47
தமிழகம்,அரியானா-31
ராஜஸ்தான்-30
ஆந்திரா-29
குஜராத்-29
கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம-21
பஞ்சாப்-19
வருடம்: மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள்
2014-2015: 77
2015-2016: 125
2016-2017: 149
2017-2018: 65
0 comments:
Post a Comment