Friday, 16 September 2016

Reliance (JIO) Offer 600 GB DATA from Rs.500 the 2nd Dhamaka Offer for Users

ரூ.500-க்கு 600 GB - ரிலையன்ஸ் ஜியோவின் இரண்டாவது அதிரடி?  

கடந்த செப்டம்பர் 01, 2016 அன்று தான், ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி ஆஃபர்கள்ளை அறிவித்து, மற்ற நிறுவனங்கள் தொழில் இருக்கலாமா வேண்டாமா என்கிற ரேஞ்சில்நடுங்க வைத்தது.

         இந்த ஒரு அறிவிப்பால சுமார் 20,000 கோடி ரூபாய் வரை மற்ற டெலிகம்யூனிகேஷன் நிறுவன பங்குகள் விலை சரிந்தன. இப்போது வரை அந்த அதிர்ச்சியில் இருந்து மற்ற நிறுவனங்கள் மீண்டதா என்று தெரியவில்லை. அதற்குள் ஜப்பான் மீது இரண்டாவது அணு குண்டை வீசியது போல, அடுத்த ஆஃபர் குண்டுகளை பொழியத் தொடங்கி இருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ.
       பயன்படுத்தும் இணையத்தின் வேகம், பயன்படுத்தும் அளவு, விலை ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு பல திட்டங்களை அறிவித்து அலறவிட்டிருக்கிறது. இந்த அணு குண்டை 3 வகையாக பிரிக்கலாம்.
1. விலையை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் திட்டங்கள் :
உதாரணமாக 500 ரூபாய் செலுத்தினால், 600 ஜிபி நெட்டை, 15 எம்.பி.பி.எஸ் வேகத்தில், அடுத்த 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இது போல மற்ற திட்டங்களை கீழே பாருங்களேன். இப்படி 500 ரூபாயில் தொடங்கும் திட்டம் அதிகபட்சமாக 1000 ரூபாய் வரை இருக்கிறது.
2. Mbps அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் :
இந்த திட்டத்தில் 50 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றால், 2000 ஜிபி இணையத்தை, 1500 ரூபாய் செலுத்தி, அடுத்த 30 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வகையான திட்டங்களில் எம்பிபிஎஸ் வேகம் அதிகரிக்க அதிகரிக்க இணைய டேட்டா அளவு குறையும், விலையும் அதிகரிக்கும். ஆனால் வேலிடிட்டி நாட்கள் குறையாது.
3. வால்யூம்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் :
இதில்  நாள் ஒன்றுக்கு பயன்படுத்தும் டேட்டாக்களை ஜிபியில் கணக்கிட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறன.  நாள் ஒன்றுக்கு 5 ஜிபி தொடங்கி 60 ஜிபி வரை திட்டங்கள் இருக்கின்றன. இதில் ஒரு குறை என்ன என்றால் எவ்வளவு வேகத்தில் இணையம் கிடைக்கும் என்பதை சொல்லவில்லை. அதே போல் விலையும் சற்று புரியாத வகையிலேயே இருக்கிறது
.

        மிக முக்கியமான விஷயம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் எந்த அதிகாரிகளாலும் இதுவரை இந்த தகவல்கள் உறுதிபடுத்தப்பட வில்லை. ஆனால் இந்த அளவுக்கு இணையத்தில் புதிய அணு குண்டுகளை கட்டாயமாக வீசும் என்பதை மட்டும் அனலிஸ்டுகளும், டெலிகம்யூனிகேஷன் வல்லுநர்களும் கணித்திருக்கிறார்கள்.
       

0 comments:

Post a Comment