'கேம்பஸ் இன்டர்வியூ' : அண்ணா பல்கலை
'டிப்ஸ்'
அண்ணா பல்கலை சார்பில், சென்னை, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லுாரிகளின், இறுதியாண்டு மாணவர்களுக்கு, 'கேம்பஸ்' தேர்வு நடந்து வருகிறது.
அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரிகள், அரசு இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் இணைப்பு பெற்றுள்ள, 550க்கும் மேற்பட்ட தனியார் இன்ஜி., கல்லுாரிகளுக்கும், விரைவில் கேம்பஸ் தேர்வு நடக்க உள்ளது.
தனியார் நிறுவன அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்படி' என, மாணவர்களுக்கு வழிகாட்டும் புத்தகத்தை, அண்ணா பல்கலையின் தொழில் நிறுவன இணைப்பு மையமான, சி.யூ.ஐ.சி., வெளியிட்டுள்ளது.இந்த விபரங்களை, www.annauniv.edu/pdf/AU-CUIC என்ற இணையதள முகவரியில் பெறலாம்.
0 comments:
Post a Comment