Friday, 28 July 2017

Anna University Announcements - No Arrears - Reappear Scheme,New Credit System&New Syllabus


கிரேடிங் முறையில் மாற்றம்:
          தற்போது S, A, B, C, D, E,U, I, W என்ற கிரேடிங் முறை இருக்கிறது. இனி, O (Outstanding- 91-100 மதிப்பெண்), A+ (Excellent- 81-90 மதிப்பெண்), A (Very Good- 71-80 மதிப்பெண்), B+ (Good - 61- 70 மதிப்பெண்), B (Above Average - 50- 60 மதிப்பெண்), RA (50 மதிப்பெண்ணுக்குக் குறைவான மதிப்பெண், SA (Shortage of Attendance), W (வகுப்பில் இருந்து விலகிக்கொள்ளல்) என்று கிரேடிங் முறையை மாற்றி இருக்கிறார்கள்.
படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல வாய்ப்பு: 
       முதல் இரண்டு வருடங்கள் பொறியியல் படிப்பைப் படித்துவிட்டு ஒரு வருடம் பயிற்சி பெறவோ அல்லது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றவோ செய்யலாம். ஓராண்டுக்குப் பின்னர், மீண்டும் படிப்பை தொடரச் செய்யலாம். இந்த முறையைப் பயன்படுத்த அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று 8.5-க்கு குறைவில்லாத கிரேடு பாயிண்ட்களையும் பெற்றிருக்க வேண்டும். 
இனி 'சி' மொழிக்குப் பதிலாக பைதான் புரோகிராமிங்:
   பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் அனைவரும் முதலாம் ஆண்டு 'சி' புரோகிராமிங் மொழி குறித்த பாடத்தைப் படிக்கிறார்கள். இனி, இந்த ஆண்டு முதல் முதலாம் ஆண்டில் 'சி' புரோகிராமிங் பாடத்துக்கு பதிலாக 'பைதான் (Python) புரோகிராமிங் பாடத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். 
வேதியியல் பாடம் விருப்பப் பாடமாகிறது:
       முதலாவது மற்றும் இரண்டாவது செமஸ்டரில் வேதியியல் பாடத்தை கட்டாயப் பாடமாக படிக்கிறார்கள் மாணவர்கள். இனி, முதல் செமஸ்டரில் மட்டும் வேதியியல் முதன்மை பாடங்களில் ஒன்றாக இருக்கும். இரண்டாவது செமஸ்டரில் விருப்பப்பாடங்களில் ஒன்றாக மாற்றி இருக்கிறார்கள். இதனால், இரண்டாவது செமஸ்டரில் வேதியியல் பாடம் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய அவசியம் கிடையாது. 
எட்டாவது செமஸ்டர் பாடங்களை முன்னரே படிக்க வாய்ப்பு:
  மாணவர்கள் ஆறு செமஸ்டர் வரை அனைத்துப் பாடத்திலும் தேர்ச்சி பெற்று, ஒட்டுமொத்தமாக 7.5 கிரேடு பாயின்ட்களைப் போற்றிருந்தால், எட்டாவது செமஸ்டர் பாடத்தை ஏழாவது செமஸ்டரிலேயே படிக்க வாய்ப்பு வழங்கப்படும். எட்டாவது செமஸ்டரில் திட்டப்பணிகளை மட்டும் செய்தால் போதுமானது. 
படித்து முடித்து மூன்று ஆண்டுகள் தேர்ச்சி பெற வேண்டும்: 
       பொறியியல் படிப்பில் சேர்ந்து பதினான்கு செமஸ்டர்களுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லேட்டரல் முறையில் சேர்பவர்கள் 12 செமஸ்டர்களின் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும். 
முதல் வகுப்பில் தேர்ச்சி: 
     ஐந்து ஆண்டுக்குள் எல்லாத் தேர்வுகளையும் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றும், ஒட்டுமொத்த மதிப்பெண் புள்ளி 8.5-க்கு குறைவில்லாமல் இருந்தால் முதல் வகுப்பில் Distinction-யுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று பட்டம் வழங்கப்படும். ஆறு ஆண்டுக்குள் அனைத்துப் பாடத்திலும் தேர்ச்சி பெற்று ஒட்டுமொத்த மதிப்பெண் புள்ளியில் 7.0-க்கு குறைவில்லாமல் பெற்றிருந்தால் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று பட்டம் வழங்கப்படும்.

0 comments:

Post a Comment