துணை கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட
பதவிக்கு இன்று குரூப் 1 தேர்வு: செல்போன்,
கால்குலேட்டருக்கு தடை
தமிழக அரசு பணியில் காலியாக உள்ள துணை கலெக்டர் - 29 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி - 34,
வணிவரித்துறை உதவி ஆணையர் - 8, மாவட்ட பதிவாளர் -1,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்- 5, மாவட்ட தீயணைப்பு அலுவலர் - 8 ஆகிய குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 85
காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடக்கிறது.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த தேர்வு நடக்கிறது.
காலை 10 மணிக்குதொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
தேர்வு மையத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக வர வேண்டும்.
தேர்வுக்கூடத்துக்கு செல்வோர் கால்குலேட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையத்தை கண்காணிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள்தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு முதல்நிலைத் தேர்வில்தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக பிரதான தேர்வுக்கு அழைக்கப்படுவார்.
அதில் தேர்ச்சிபெறுவோர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
அதில் தேர்ச்சி பெறுவோருக்கு கட் ஆப் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் பணிகள் ஓதுக்கீடு செய்யப்படும்
0 comments:
Post a Comment