பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2 ஆயிரத்து 510 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பி.இ., பி.டெக் படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
பிரபல பொதுத்துறை நிறுவனங் களில் ஒன்று பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவை வழங்கும் இந்த நிறுவனத்தில் தற்போது ஜூனியர் டெலிகாம் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கேட்-2017 தேர்வின் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
மொத்தம் 2 ஆயிரத்து 510 பேர் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
கல்வித்தகுதி:
பி.இ., பி.டெக் அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ் ரேடியோ, கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், ஐ.டி., இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
எம்.எஸ்சி. எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
கேட்-2017 தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஏற்கனவே கேட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் இந்த பணிகளுக்கும் ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பம் 31-1-2017-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விரிவான விவரங்களை தெரிந்துகொள்ள www.extrenalexam.bsnl.co.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.
0 comments:
Post a Comment