Next Biggest Offer Ready from JIO NETWORK
1000 ரூபாய்க்கு ஜியோ ஸ்மார்ட்போன்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்த அதிரடி ஆஃபராக 1000 ரூபாய் விலையில் அன்லிமிடட் வீடியோ காலிங் மற்றும் வாய்ஸ் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளது.
குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்
தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சிம்மை கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது. 3 மாதங்களுக்கு இலவசமாக 4ஜி இன்டர்நெட் சேவையை மற்றும் வாய்ஸ்கால்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டதால் ஜியோ சிம் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். இதனால், அந்நிறுவனம் குறுகிய நாட்களுக்குள்ளாகவே 25 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றது.
ஜியோவின் வருகை தொலைதொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இது போட்டி நிறுவனங்களுக்கு கடும் சவாலாக அமைந்தது.
அன்லிமிடட் காலிங்
இந்நிலையில், ஜியோவின் அடுத்த அதிரடி ஆஃபராக 1000 ரூபாய் விலையில் அன்லிமிடட் வீடியோ காலிங் ம்ற்றும் வாய்ஸ் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மாட் போன் VOLTE வசதியை கொண்டுள்ளதால் இந்த போன் மூலம் செய்யப்படும் அனைத்து கால்களும் இன்டர்நெட் வழியாகவே செல்லும் இதனால் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங்களுக்கு தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை.
100 மில்லியன் வாடிக்கையாளர்கள்
மேலும் இந்த நிறுவனம் 1500 விலையில் மற்றொரு ஸ்மாட் போனையும் அறிமுகப்படுத்த போவதாக தெரிகிறது. இந்த இருபோனிலும் உள்ள ஹார்ட்வேர் அம்சங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. ஏற்கனவே இந்நிறுவனம் 25மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்ற நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள 4ஜி போன் மூலம் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை கைபற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2017 ல் வெளியிடு
இந்த போனை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் லாவா மற்றும் ஒரு சீன நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த போன் 2017 ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் செல்போன் மார்கெட்டில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என பேசப்படுகிறது